Homeசெய்திகள்சினிமாசூர்யா44 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜெய் பீம் புகழ் நடிகர்

சூர்யா44 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜெய் பீம் புகழ் நடிகர்

-

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இறுதியாக வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து கமல் நடித்த விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சூர்யா தனது 44-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை, சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.

ஜெயராம், கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அந்தமான் தீவில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் ஜெய் பீம் பட புகழ் தமிழ் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தில் காவலராக நடித்து அசத்தியிருப்பார். இதைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் படத்தை இயக்கி வெற்றி பெற்றார். மேலும், தற்போது கார்த்தியை வைத்து புதிய படமும் இயக்க இருக்கிறார்.

MUST READ