சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடிகர் கூல் சுரேஷ் நடனமாடியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டிருந்த சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இன்று வரை ஹீரோ வேடங்களை மட்டுமே ஏற்று நடித்து வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன், 80ஸ் பில்டப் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன
தற்போது சந்தானம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. டிக்கிலோனா பட இயக்குநர் கார்த்திக் யோகி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் இத்திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஜான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, ஜான் விஜய் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
#CoolSuresh Vibing for Yemmadi Aathadi song at #VadakkupattiRamasamy Success Meet !!#Santa#Santhanam
— Vignesh (@Vignesh58Viki) February 10, 2024