Homeசெய்திகள்சினிமாதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் ஜாமீன் ரத்து!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் ஜாமீன் ரத்து!

-

- Advertisement -

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் ஜாமின் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் ஜாமீன் ரத்து!

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இரவு ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது நடிகர் அல்லு அர்ஜுன் சந்தியா திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் அவரைக் காண திரண்டு வந்தனர். இதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் ரேவதி என்ற பெண் பலியானார். அதைத்தொடர்ந்து அவருடைய ஒன்பது வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்து கோமாவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் அல்லு அர்ஜுன் உயிரிழந்த அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார். இருப்பினும் அல்லு அர்ஜுன் உட்பட நான்கு பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் சில மணி நேரங்களில் அல்லு அர்ஜுன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜுன், “நான் நடித்த 30 சினிமா வெளியான போது முதல் நாளே அதே திரையரங்கில் சென்று படம் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த முறை யாரும் எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டம் அதிகமாக கூடுகிறது என்று தெரியவந்ததும் நானும் என் குடும்பத்தாரும் அங்கிருந்து கிளம்பி விட்டோம். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் ஜாமீன் ரத்து!ஆனால் அந்தக் கூட்ட நெரிசலில் ஒரு ரசிகை உயிரிழந்தது எனக்கு மறுநாள் காலையில் தான் தெரியவந்தது. இதை அறிந்து நான் மிகவும் கவலை அடைந்தேன்” என்று தெரிவித்தார் அல்லு அர்ஜுன். மேலும் சிலர் தன் பெயரைக் எடுக்க முயற்சிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இதை தொடர்ந்து அல்லு அர்ஜுனின் கருத்துக்கள் ஜாமீன் நிபந்தனையை மீறுவதாகவும் இது விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்காகவும் அல்லு அர்ஜுனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ