தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் தற்போது ஓய்வு இல்லாமல் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் பல வெற்றி படங்களை தந்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கும் தனுஷ், குபேரா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன்பிறகு தன்னுடைய 52 வது திரைப்படமான இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இப்படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இவர், பாலிவுட்டில் ராஞ்சனா, அத்ரங்கி ரே ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடிக்கிறார்.
ஏற்கனவே இது தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் இப்படம் 2025 நவம்பர் 28 அன்று திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் டெல்லியில் பிரபல கல்லூரி ஒன்றில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்திலும் வைரலாகி வருகின்றன.