கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜோஸ்வா இமை போல் காக்க படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.
கோலிவுட் சினிமாவில் காஃபிக்கும், காதலுக்கும் பெயர் போன இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். காதலையும், காதலர்களையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்ப்பதோடு மட்டுமன்றி, திரையிலும் அதை கலர்புல்லாக கொண்டு வரும் மேஜிக்மேன் இயக்குநர் கௌதம் மேனன். மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கௌதம் மேனன், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். இரண்டாவது படத்தில் சூர்யாவுக்கு காக்கி மாட்டி அதிரடி காட்டினார். தாறுமாறு ஹிட் அடித்த காக்க காக்க திரைப்படத்தில், காதல், தோட்டாக்கள் இரண்டும் ஒரே வேகத்தில் பாய்ந்தன.
கௌதம் மேனனின் திரைவாழ்வில் அனைத்தும் ஏறுமுகம் தான். இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. சிம்புவை வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜோஸ்வா இமை பால் காக்க. இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி அதே ஆண்டு படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ஆனால், ஒரு சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ள இப்படத்தில் வருண் நாயகனாக நடித்திருப்பார். கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர்.
இப்படத்திற்கு பின்னர் கௌதம் மேனன் எடுத்த என்னை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை எல்லாம் வௌியிட்டார். ஆனால், இத்திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், படத்திலிருந்து புதிய பாடல் தற்போது வெளியாகி உள்ளது.