அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ரசவாதி… புதிய பாடல் ரிலீஸ்…
- Advertisement -
அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரசவாதி படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் அர்ஜூன் தாஸ். கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் அந்தகாரம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அர்ஜூன் தாஸூக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து அநீதி என்றபடத்தில் நடித்திருந்தார். வசந்த பாலன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இறுதியாக அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் போர் திரைப்படம் வௌியாகி வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ரசவாதி என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை டிஎம்ஏ மெக்கானிக் கம்பெனி தயாரித்து உள்ளது. இதில், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்ரம்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.
ரசவாதி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வௌியாக உள்ளது. இந்நிலையில், தை தை ரசவாதி எனத் தொடங்கும் புதிய பாடல் வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.