நடிகர் ரஜினி, வேட்டையன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். ரஜினியின் 170வது திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், ரஜினி கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாகி வருகிறது. அதன்படி தற்காலிகமாக தலைவர் 171 என்ற தலைப்பை வைக்கப்பட்டுள்ள இந்த படம் சம்பந்தமாக வெளிவரும் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
The wait is almost over! #Thalaivar171TitleReveal Teaser releasing today at 6PM 😍@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv#Thalaivar171 pic.twitter.com/A6RMOzUP90
— Sun Pictures (@sunpictures) April 22, 2024
ஏற்கனவே படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு இந்த படத்தின் டீசர் இன்று (ஏப்ரல் 22) மாலை 6 மணி அளவில் வெளியாக இருப்பதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது அடுத்தடுத்த போஸ்டர் வரை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றனர். தற்போது வெளியாகி உள்ள புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இதன் மூலம் படத்தின் டீசரின் மிதன் எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக எகிறி உள்ளது.
தலைவர் 171 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.