சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக ரஜினி, கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 171 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படமானது ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ரஜினியை டிஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் தளபதி பட லுக்கில் காண்பிக்க இருக்கிறார். இதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் லோகேஷ் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் தலைவர் 171 படத்தின் பிரீ ப்ரோடக்ஷன் பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து 2024 ஜூன் மாதத்தில் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என சமீபத்தில் நடந்த பேட்டியில் லோகேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதன் கூடுதல் தகவலாக, ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தலைவர் 171 படத்தின் டைட்டிலை வெளியிட பட குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. எனவே இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -