Homeசெய்திகள்சினிமாரஜினியின் பிறந்தநாளன்று ரீ ரிலீஸ் செய்யப்படும் 'தளபதி'..... டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

ரஜினியின் பிறந்தநாளன்று ரீ ரிலீஸ் செய்யப்படும் ‘தளபதி’….. டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

-

ரஜினியின் பிறந்தநாளன்று ரீ ரிலீஸ் செய்யப்படும் தளபதி திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.ரஜினியின் பிறந்தநாளன்று ரீ ரிலீஸ் செய்யப்படும் 'தளபதி'..... டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

கடந்த 1991 ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தளபதி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை மணிரத்னம் இயக்கியிருந்தார். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மம்மூட்டி, அரவிந்த்சாமி, ஷோபனா, ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமானது மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதையை தழுவி உருவாக்கப்பட்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு முன்பாக வெளியான இந்த படம் அன்று முதல் இன்று வரையிலும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களின் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ரஜினியின் பிறந்தநாளன்று ரீ ரிலீஸ் செய்யப்படும் 'தளபதி'..... டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!தமிழ் சினிமாவில் ஸ்டைலுக்காக போற்றப்படும் ரஜினி, இந்த படத்தில் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். சிறுசிறு கண் அசைவிலும் கூட ரஜினி எப்பேர்பட்ட நடிகன் என்பதை இந்த தளபதி படத்தில் காட்டி இருந்தார் மணிரத்னம். இந்நிலையில் இந்த படம் நாளை (டிசம்பர் 12) ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு 4K தரத்தில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்காக பெங்களூரு போன்ற பகுதிகளில் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே ரஜினி ரசிகர்கள் பலரும் இப்பொழுதே ரஜினியின் பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

MUST READ