Homeசெய்திகள்சினிமாஅதிரடியாக வெளியானது தளபதி 68 படத்தின் தலைப்பும், முதல் தோற்றமும்...

அதிரடியாக வெளியானது தளபதி 68 படத்தின் தலைப்பும், முதல் தோற்றமும்…

-

விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தின் முதல் தோற்றத்துடன், படத்தின் தலைப்பும் வெளியாகி உள்ளது.

ரசிகர்களால் தளபதி என்று அன்புடன் கொண்டாடப்படும் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்து வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழு அமெரிக்கா சென்றது. அங்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்து சென்னை திரும்பியது. இதைத் தொடர்ந்து இத்தாலியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது மீண்டும் படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

இந்நிலையில், விஜய் நடிக்கும் இப்படத்திற்கு the Greatest Of All Time என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிரடியாக வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இரட்டை வேடத்தில் விஜய் இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள்  கொண்டாடி வருகின்றனர்.

MUST READ