Homeசெய்திகள்சினிமாதெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற 'தளபதி 69' படக்குழு.... அப்போ இது அந்த கதை...

தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற ‘தளபதி 69’ படக்குழு…. அப்போ இது அந்த கதை தானா?

-

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது தனது 69 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 69 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற 'தளபதி 69' படக்குழு.... அப்போ இது அந்த கதை தானா?இதில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன், ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அரசியல்வாதியாக மாறியுள்ள விஜய்யின் கடைசி படம் இது என்பதால் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதாவது இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி இரவு தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் தளபதி 69 படம் என்று பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருப்பினும் தளபதி 69 பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில், இந்த படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இல்லை என மறுத்திருக்கிறது. ஆனாலும் தயாரிப்பு நிறுவனம், பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற 'தளபதி 69' படக்குழு.... அப்போ இது அந்த கதை தானா? அதாவது பகவந்த் கேசரி படமானது நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கும் நடிகை ஸ்ரீலீலாவிற்கும் இடையிலான அப்பா – மகள் போன்ற உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. அதே போல் தளபதி 69 படத்திலும் மமிதா பைஜூவின் கதாபாத்திரத்திற்கும் பகவந்த் கேசரி படத்தில் ஸ்ரீ லீலாவின் கதாபாத்திரத்திற்கும் ஒரு ஒற்றுமை இருப்பதனால் கடைசி நிமிடத்தில் நீதிமன்றம், நோட்டீஸ் என தலைவலி வேண்டாம் என்று ஒரு முன் பாதுகாப்பிற்காக தளபதி 69 படக்குழு பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ