தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவர், ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அல்லது பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகின்ற ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.