தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் மிகப்பெரிய ஹீரோவாக திகழ்பவர் நடிகர் விஜய். உலகம் முழுவதும் இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. சமீபத்தில் இவர் நடிப்பில் 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியாகி 300 கோடிகளுக்கு மேல் வசூலித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது தளபதி 69 படத்தின் அறிவிப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே தளபதி 69 படம் தான் தன்னுடைய கடைசி படமாக இருக்கும் என்றும் அதைத்தொடர்ந்து தீவிர அரசியலில் விஜய் இறங்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் போஸ்டரில் அரசியல் குறியீடுகள் இருப்பதாக இணையதளத்தில் பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக ஜனநாயகத்தை காக்கும் தீப்பந்தம் விரைவில் வருகிறது என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் வெற்றி வாகை சூடி மக்களின் பேராதரவோடு ஜனநாயக முறைப்படி ஆட்சி அமைப்பார் என்பதை மறைமுகமாகவும் குறிப்பிடுகின்றது என்றும் இனிய வாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த போஸ்டரில் கையில் தீப்பந்தத்துடன் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த்தின் அரசியல் கட்சியான தேமுதிக கட்சியின் கொடியிலும் தீபந்தம் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். இவை இரண்டையும் தொடர்பு படுத்தி விஜயகாந்தின் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு விஜய் கொள்கைகளை வகுத்திருக்கிறார் என்றும் இணையத்தில் விவாதித்து வருகின்றனர். சமீபத்தில் கூட தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை திரையில் கொண்டு வந்தது கூட ஒருவகை அரசியல் காரணம் தான் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த போஸ்டரை பார்க்கும் பொழுது இது ஏற்கனவே எச் வினோத் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் உருவாக இருந்த புதிய படத்தின் கதை தான் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எது எப்படியோ விஜயின் கடைசி திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கப் போகும் அந்த அனுபவத்திற்காக பல ரசிகர்களும் ஏக்கத்தோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.