Homeசெய்திகள்சினிமாமீண்டும் ரிலீஸ் செய்யப்படும் தளபதி விஜயின் 'அழகிய தமிழ்மகன்'!

மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் தளபதி விஜயின் ‘அழகிய தமிழ்மகன்’!

-

சமீபத்தில் பழைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது ட்ரெண்டாகிவிட்டது. அந்த வகையில் விஜய் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான அழகிய தமிழ்மகன் திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் தளபதி விஜயின் 'அழகிய தமிழ் மகன்'!2007 ஆம் ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளியான அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை இயக்குனர் பரதன் இயக்கியிருந்தார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்திருந்தன. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர்.
இரட்டை வேடங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக விஜய் கலக்கலாக நடித்திருப்பார். வழக்கமான மாஸ் மசாலா படமாக மட்டும் இல்லாமல் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறன் படைத்த இளைஞன் ஒருவன், தன்னால் தன் காதலி இறந்து விடக் கூடாது என்பதற்காக அவரை விட்டு பிரிந்து செல்வார். பின்னர் அவரைப் போலவே உருவம் கொண்ட மற்றொருவன் கதைக்குள் நுழைந்த பின்பு மேலும் சுவாரஸ்யம் கூடிக் கொண்டே போகும். இறுதியில் இந்த பிரச்சனை எவ்வாறு சரி செய்யப்பட்டது என்பதுதான் அழகிய தமிழ் மகன் படத்தின் கதையாக இருந்தது. இப்படி ஒரு வித்தியாசமான கதையில் விஜயின் துள்ளலான நடிப்பும், நடனமும் பல ரசிகர்களை கவர்ந்திருந்தது. மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் தளபதி விஜயின் 'அழகிய தமிழ் மகன்'!இருப்பினும் ரிலீஸ் ஆன அந்த சமயத்தில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் தற்போது உள்ள ரசிகர்கள் இப்படத்தை ரசிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் மீண்டும் மார்ச் 22 அன்று இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜயின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான கில்லி படம் ஏப்ரல் மாதத்தில் ரீ ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தடுத்து விஜயின் திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாட காத்திருக்கின்றனர்.

MUST READ