Homeசெய்திகள்சினிமாரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரைக்கு வரும் 'தளபதி' திரைப்படம்

ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரைக்கு வரும் ‘தளபதி’ திரைப்படம்

-

நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை மீண்டும் திரைக்கு வரும் ‘தளபதி’ திரைப்படம் !

ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரைக்கு வரும் 'தளபதி' திரைப்படம்கோலிவுட்டில் நாளை மறுநாள் மிர்ச்சி சிவாவின் சூது கவ்வும்-2, சித்தார்த்தின் மிஸ் யூ, பரத் நடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், மழையில் நனைகிறேன் ஆகிய நான்கு படங்கள் திரைக்கு வருகிறது!

நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது 74வது  பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது 74வது பிறந்த நாளை முன்னிட்டும், நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டு திரையுலக வாழ்க்கையை கொண்டாடும் விதமாகவும் மணிரத்தினம் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், இளையராஜா இசையில்  வெளியான தளபதி திரைப்படம் நாளை ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. ரஜினிகாந்த் உடன் மலையாள நடிகர் மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீவித்யா, ஷோபனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.150 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் ரீ-ரிலிஸ் செய்யப்படுகிறது. மேலும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு

இப்படம் மீண்டும் திரைக்கு வருவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரைக்கு வரும் 'தளபதி' திரைப்படம்நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து ஹிட் அடித்த படம் சூது கவ்வும். 2013ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் அடுத்த பாகம் சூது கவ்வும் 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ரமேஷ் திலக் என பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி குமார்  மற்றும் தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ளனர்.  இப்படம் நாளை மறுநாள்   திரைக்கு வருகிறது.

படத்தின் முதல் பாகம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் கல்ட் கிளாசிக் என்ற இடத்தைப் பெற்று வரும் நிலையில்  இரண்டாவது பாகமும் அந்த இடத்தை தக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மாப்ள சிங்கம், களத்தில் சந்திப்போம் படங்களை தொடர்ந்து ராஜசேகர்  இயக்கியுள்ள படம் மிஸ் யூ. இதில் சித்தார்த் கதாநாயகனாக  நடித்துள்ளார். ஆஷிகா ரங்கநாத், ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சித்தார்த் நடிப்பில் வெளியாகும் காதல் திரைப்படம் இதுவாகும். கடந்த  நவம்பர் மாதம் வெளியாக இருந்த இப்படம் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டு டிசம்பர் 13-ஆம் தேதி நாளை மறுநாள் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத், சுஹைல், ராஜாஜி, அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உட்பட பலர் நடிப்பில்  ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

ஹைப்பர் லிங்க் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜோஸ் ப்ராங்க்ளின் இசையமைதுள்ளார்.  இப்படமும் நாளை திரைக்கு வருகிறது.  மேலும் டி. சுரேஷ் குமார் இயக்கத்தில் மலையாள நடிகர் அன்சல் பால் கதாநாயகனாக நடித்துள்ள மழையில் நனைகிறேன் நாளை திரைக்கு வருகிறது.

இவர் ஏற்கனவே தமிழில் ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

MUST READ