Homeசெய்திகள்சினிமா'தளபதி 68' பக்கா.... ஓப்பனிங் சாங் வேற லெவல்.... அப்டேட் கொடுத்த படத்தின் பிரபலம்!

‘தளபதி 68’ பக்கா…. ஓப்பனிங் சாங் வேற லெவல்…. அப்டேட் கொடுத்த படத்தின் பிரபலம்!

-

- Advertisement -

தளபதி 68 பக்கா.... ஓப்பனிங் சாங் வேற லெவல்.... அப்டேட் கொடுத்த படத்தின் பிரபலம்!விஜய் லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் டிஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தளபதி 68 படம் சம்மந்தமான பல அப்டேட்டுகள் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில்தொடர்ந்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபுவின் பல படங்களில் நடித்த வைபவ், தளபதி 68 படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.தளபதி 68 பக்கா.... ஓப்பனிங் சாங் வேற லெவல்.... அப்டேட் கொடுத்த படத்தின் பிரபலம்! அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் வைபவ், “தளபதி 68 திரைப்படம் பக்காவாக உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஓபனிங் சாங் வேற லெவலில் இருக்கிறது. படத்தில் என் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. தளபதி 68-யில் நான் புதிய கெட்டப்பில் நடிக்க இருக்கிறேன். தளபதி 68 இல் நடிப்பதில் நான் பெருமை அடைகிறேன்” என்று பேசியுள்ளார்.

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா திரைப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ