தளபதி 69 படத்தின் டைட்டில் வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 69ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அரசியல்வாதியாக மாறியிருக்கும் நடிகர் விஜயின் கடைசி படம் இது என்பதால் ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன்படி இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதே ரசிகர்கள் தங்களின் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். இந்த படத்தை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அடுத்தது கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இவ்வாறு இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் ஒரு பக்கம் வெளிவந்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த படமானது அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இருப்பினும் இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு தின ஸ்பெஷலாக வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் கசிந்தது. அதன்படி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் இரவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.