இயக்குனர் பா. ரஞ்சித் நாளை தண்டகாரண்யம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து தனது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர் தண்டகாரண்யம் எனும் திரைப்படத்தையும் தயாரிக்கிறார். அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் இரண்டாம் உலகப்போரின் கடைசி கொண்டு எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை அதியன் ஆதிரை இயக்கியிருந்த நிலையில் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அதியன் ஆதிரை இயக்கும் திரைப்படம் தான் தண்டகாரண்யம். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
“காடுன்னா வெறும் மரம், செடி, கொடி மட்டும் கெடையாது” 🌳#தண்டகாரண்யம் முதல் பார்வை நாளை 6 மணிக்கு | #Thandakaaranyam First Look Tomorrow 6 PM 🔥 @officialneelam @LearnNteachprod @AthiraiAthiyan @KalaiActor @Dineshoffical @Riythvika @VinsuSam @actorshabeer @ActorMuthukumar… pic.twitter.com/Og1KsvUe4F
— pa.ranjith (@beemji) September 26, 2024
மேலும் இவர்களுடன் இணைந்து முத்துக்குமார், பால சரவணன், ரித்விகா, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (செப்டம்பர் 27) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என இயக்குனர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.