Homeசெய்திகள்சினிமாதங்கலான் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு... தயாரிப்பாளர் கூறிய தகவல்....

தங்கலான் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு… தயாரிப்பாளர் கூறிய தகவல்….

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குநர் பா ரஞ்சித். தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் காட்ட முயலும் முக்கிய இயக்குநர் அவராவார். அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்த பா ரஞ்சித், முதல் படத்திலேயே வெற்றி கண்டார். இதை தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். ஒரு மதில் சுவரும், அதை சுற்றி நடக்கும் அரசியலையும் அசராமல் திரையில் காட்டி ரசிகர்களை அசரடித்தார்.

தற்போது அவரது இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளது.

முதலில் பொங்கல் பண்டிகைக்கு படம் வௌியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போகிறது. இந்நிலையில், படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அண்மையில் இணையத்தில் தகவல் வெளியானது. தற்போது, ஒரு சில நாட்களில் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அகிராரப்பூர்வமாக அறிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்

MUST READ