Homeசெய்திகள்சினிமாநாளை வெளியாகும் 'தங்கலான்' படத்தின் முதல் பாடல் ..... ப்ரோமோ வெளியீடு!

நாளை வெளியாகும் ‘தங்கலான்’ படத்தின் முதல் பாடல் ….. ப்ரோமோ வெளியீடு!

-

தங்கலான் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.நாளை வெளியாகும் 'தங்கலான்' படத்தின் முதல் பாடல் ..... ப்ரோமோ வெளியீடு!நடிகர் விக்ரமின் புதிய பரிமாணத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ளார் . இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கிஷோர் குமார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஆர் கே செல்வா இதன் எடிட்டிங் பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். இதில் டேனியல் கால்டகிரோன் வில்லனாக நடித்திருக்கிறார்.
மேலும் இவர்களுடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரும் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தின் மினிக்கி மிநிக்கி எனும் முதல் பாடல் (நாளை) ஜூலை 17 இல் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வரும் நிலையில் ஏற்கனவே இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. அதன்படி இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

MUST READ