தங்கலான் படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க பா ரஞ்சித் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகன், டேனியல் கால்டகிரோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோலார் தங்க சுரங்கத்தின் பின்னணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது ப்ரமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அது மட்டும் இல்லாமல் படத்தின் முதல் இரண்டு பாடல்களுமே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இந்த படத்தின் அறுவடை எனும் மூன்றாவது பாடல் இன்று (ஆகஸ்ட் 12) மாலை 7 மணி அளவில் வெளியாக இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.
Harvesting hope and music, one note at a time 🌾🎶
The 3rd Single, #Aruvadai from #Thangalaan is releasing tomorrow at 7 PM 💖
A @gvprakash Musical 🎼#ThangalaanFromAug15@Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe #StudioGreen @OfficialNeelam @parvatweets @MalavikaM_… pic.twitter.com/X2Mv8vFNYZ
— Studio Green (@StudioGreen2) August 11, 2024
முதல், இரண்டு பாடல்களைப் போல் இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே படமானது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று தங்கலான் திரைப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.