Homeசெய்திகள்சினிமா'தங்கலான்' படத்தின் வில்லன் போஸ்டர் வெளியீடு!

‘தங்கலான்’ படத்தின் வில்லன் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் தங்கலான். இந்த படத்தில் விக்ரம் தவிர மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'தங்கலான்' படத்தின் வில்லன் போஸ்டர் வெளியீடு!இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அடுத்ததாக படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த படம் 2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் சமீப காலமாக பல தகவல்கள் பரவி வருகின்றன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தங்கலான்' படத்தின் வில்லன் போஸ்டர் வெளியீடு!இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் டேனியல் கால்டகிரோனின் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் நேற்று (ஜூன் 18) அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ