விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் 100 கோடி வசூலை கடந்துள்ள நிலையில் பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
நடிகர் விக்ரம் நடிப்பில் தற்போது வீர தீர சூரன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. விக்ரமின் 62 வது படமான இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் விக்ரம் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இந்த நாட்களாக நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் விக்ரம், பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். கோலார் தங்க வயலில் தங்கம் எப்படி கண்டறியப்படுகிறது. அங்கு தமிழர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் திரையிடப்பட்ட நிலையில் தற்போது 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை பட குழுவினரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை பா ரஞ்சித் மற்றும் மற்ற படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.