Homeசெய்திகள்சினிமாமுதல் நாளில் 25 கோடியை தாண்டிய 'தங்கலான்' பட வசூல்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முதல் நாளில் 25 கோடியை தாண்டிய ‘தங்கலான்’ பட வசூல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

தங்கலான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.முதல் நாளில் 25 கோடியை தாண்டிய 'தங்கலான்' பட வசூல்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கியிருந்த தங்கலான் திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதாவது பா ரஞ்சித் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்திய இருக்கலாம் என்று பலரும் தங்களின் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். படத்தின் முதல் பாதி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் இரண்டாம் பாதி சலிப்பை தருகின்றன. அதே சமயம் திரைக்கதையிலும் குழப்பம் இருக்கிறது. ஆனால் ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. முதல் நாளில் 25 கோடியை தாண்டிய 'தங்கலான்' பட வசூல்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!மேலும் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் வெறித்தனமாக நடித்து படத்திற்காக தனது ஆன்மாவையே கொடுத்திருக்கின்றனர். எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 26.44 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்ததாக இந்த படம் இன்னும் வட இந்தியாவில் ரிலீஸ் செய்யப்படவில்லை. வட இந்தியாவில் வருகின்ற ஆகஸ்ட் 30 அன்று ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ