Homeசெய்திகள்சினிமாமிகவும் எதிர்பார்க்கப்படும் 'தங்கலான்' ட்ரைலர் ரிலீஸ் இந்த தேதியில் தான்!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘தங்கலான்’ ட்ரைலர் ரிலீஸ் இந்த தேதியில் தான்!

-

விக்ரம் தற்போது சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தங்கலான்' ட்ரைலர் ரிலீஸ் இந்த தேதியில் தான்! இதற்கு முன்பாக கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். விக்ரம் இந்த படத்தில் சேது, காசி, பிதாமகன் போன்ற தனது முந்தைய படங்களை போல் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க கிஷோர் குமார் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து முதல் பாடல் வெளியாகும் என ஜி.வி. பிரகாஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அப்டேட் கொடுத்திருந்தார். இதற்கிடையில் இந்த படம் 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என சமூக வலைதளங்களை செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் தங்கலான் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தங்கலான்' ட்ரைலர் ரிலீஸ் இந்த தேதியில் தான்! அதன்படி இதன் ட்ரெய்லர் வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி திங்கட்கிழமை வெளியாகும் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ