தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தங்கர் பச்சான் இயக்கத்தில் கருமேகங்கள் கலைகின்றன எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பாரதிராஜா கௌதம் வாசுதேவ் மேனன் அதிதி பாலன் யோகி பாபு எஸ் ஏ சந்திரசேகர் டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறுகதைகளை தழுவி உருவாக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கி இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது. விஏஓ மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷ் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது.
இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் 3 பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு கிளிம்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.