Homeசெய்திகள்சினிமாவிரைவில் வெளியாகும் 'தனி ஒருவன் 2' படத்தின் அப்டேட்!

விரைவில் வெளியாகும் ‘தனி ஒருவன் 2’ படத்தின் அப்டேட்!

-

- Advertisement -

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் எம் ராஜா இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக அரவிந்த்சாமி மிரட்டி இருந்தார். மேலும் நயன்தாரா, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படம் வெளியான சமயங்களில் பெரிய அளவில் பேசப்பட்ட படமாகும். குறிப்பாக அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது 8 ஆண்டுகள் கழித்து தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

இது குறித்து ஏற்கனவே ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். ஆனால் அவர் பொன்னியின் செல்வன், சைரன், இறைவன் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி இருந்ததால் தனி ஒருவன் 2 படத்திற்கு தாமதம் ஏற்பட்டது.

தற்போது தனி ஒருவன் 2 படத்தின் அப்டேட் வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015ல் தனி ஒருவன் திரைப்படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி தான் வெளியானது அதனால் 8 வருடங்கள் கழித்து அதே நாளில் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி மற்றும் ராஜா இவர்களின் கூட்டணி ஜெயம், எம் குமரன் S/o மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம், சம்திங் சம்திங் உள்ளிட்ட படங்களிலும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ