Homeசெய்திகள்சினிமாஊழலை அதிகரித்ததற்கு நன்றி... இந்தியன் 2 விழாவில் கமல்ஹாசன் பேச்சு...

ஊழலை அதிகரித்ததற்கு நன்றி… இந்தியன் 2 விழாவில் கமல்ஹாசன் பேச்சு…

-

- Advertisement -
ஊழலை அதிகரிக்கத் செய்ததற்கு நன்றி எனவும், அது தான் இந்தியன் 2 திரைப்படம் உருவாகக் காரணம் என்றும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
 கமல்ஹாசன் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் இந்தியன் இரண்டாம் பாகம். முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்படாத இந்தியன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. படத்தில் கமலுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக், மனோபாலா, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மற்றும் லைகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன. அண்மையில் இப்படத்தின் இசை வௌியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்தியன் இரண்டாம் பாகத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. மேலும் இதற்கான நிகழ்ச்சி மும்பையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, இயக்குநர் ஷங்கர், இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஊழலை அதிகரிக்கத் செய்ததற்கு நன்றி எனவும், அது தான் இந்தியன் 2 திரைப்படம் உருவாகக் காரணம் என்று கூறினார். மேலும், இத்திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் எனவும், படத்திற்காக அனைவரும் 100 சதவிகித உழைப்பை கொடுத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

MUST READ