Homeசெய்திகள்சினிமாமீண்டும் வெளியான நாடு... ஓடிடியில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு...

மீண்டும் வெளியான நாடு… ஓடிடியில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு…

-

- Advertisement -
தர்ஷன் மற்றும் மஹிமா நம்பியா நடிப்பில் உருவாகி இருக்கும் நாடு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவிலும், மமலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஹிமா நம்பியார். இவர் சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்தின் மூலம் தமிழுக்கு நாயகியாக அறிமுகம் ஆனவர். இதைத் தொடர்ந்து அருண் விஜய் நடித்த குற்றம் 23, அகத்திணை, ஆர்யா நடித்த மகாமுனி உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மலையாளத்திலும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் மஹிமா நம்பியார்.

 

மலையாளத்தில் மஹிமா நடிப்பில் இறுதியாக ஆர்டிஎக்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தமிழில் ராகவா லாரன்ஸூடன் இணைந்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்தார். இந்நிலையில் மஹிமா நடித்த திரைப்படம் நாடு. இதில் பிக்பாஸ் புகழ் தர்ஷனும் நாயகனாக நடித்திருக்கிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெய், அனன்யா, அஞ்சலி, சர்வானந்த் ஆகியோரின் நடிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தை இயக்கி எம் சரவணனன் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ந்த படத்தில் தர்ஷன் மற்றும் மஹிமா நம்பியார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நாடு திரைப்படம் தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பை பெறுகிறது.

MUST READ