தல, அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டில் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகின்றன. இதற்கிடையில் சிறு வயதிலிருந்தே பைக், கார் ஓட்டுவதில் ஆர்வமுடைய அஜித், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தனது அணியினருடன் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை கைப்பற்றினார். இதற்காக நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப் பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் தளபதி விஜய், அஜித்தை வாழ்த்தவில்லை என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இது குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அந்த பேட்டியில், “அஜித் சார் கார் பந்தயத்தில் ஜெயித்த போது விஜய் சார் தான் முதலில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதே சமயம் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட போதும் விஜய் சார் வாழ்த்து தெரிவித்தார். அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள். விஜய் சார் அஜித் சாரை வாழ்த்தவில்லை என்று வெளியாகும் தகவல் உண்மையல்ல” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -