Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி' படத்தால் லைக்கா நிறுவனத்திற்கு வந்த பெரிய சிக்கல்!

‘விடாமுயற்சி’ படத்தால் லைக்கா நிறுவனத்திற்கு வந்த பெரிய சிக்கல்!

-

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.'விடாமுயற்சி' படத்தால் லைக்கா நிறுவனத்திற்கு வந்த பெரிய சிக்கல்! ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் லைக்கா நிறுவனத்திற்கு விடாமுயற்சி படத்தால் புதிய சிக்கல் வந்துள்ளது. அதாவது விடாமுயற்சி திரைப்படமானது கடந்த 1997 இல் வெளியான பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. அதன்படி விடாமுயற்சி படக்குழுவினரும் இந்த படத்தை பிரேக் டவுன் படத்தை தழுவி சிறு மாற்றங்கள் செய்து படத்தினை உருவாக்கி வருகின்றனர். ஆனால் பிரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் விடாமுயற்சி படத்தை இயக்கி வருகின்றனராம். 'விடாமுயற்சி' படத்தால் லைக்கா நிறுவனத்திற்கு வந்த பெரிய சிக்கல்!இதனால் பிரேக் டவுன் பட தயாரிப்பு நிறுவனம் லைக்கா நிறுவனத்திடம் சுமார் 150 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம். ஏற்கனவே படம் தொடங்குவதற்கு முன்பாக லைக்கா நிறுவனம்தான் அஜித்தை வைத்து இது போன்ற கதையில் படம் பண்ண வேண்டும் என ஐடியா கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே லைக்கா நிறுவனம் இதை எப்படி சமாளிக்க போகிறது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர்.

MUST READ