Homeசெய்திகள்சினிமாதாய் அருகில் நல்லடக்கம் செய்யப்படும் பவதாரிணியின் உடல்!

தாய் அருகில் நல்லடக்கம் செய்யப்படும் பவதாரிணியின் உடல்!

-

தாய் அருகில் நல்லடக்கம் செய்யப்படும் பவதாரிணியின் உடல்!இளையராஜாவின் மகள் பவதாரிணி, திரை துறையில் பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்தவர். புல்லாங்குழலை விட தனது மென்மையான குரலினால் பல பாடல்களை பாடி ரசிகர்களை ரசிக்க வைத்தவர். 47 வயது நிரம்பிய
இவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய முன் தினம் காலமானார். அதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து நேற்று விமானத்தின் மூலம் சென்னை தி நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு பவதாரணியின் உடல் கொண்டுவரப்பட்டது. பொதுமக்களும் திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்திய பின், இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் ரஜினி, கமல், பாரதிராஜா, வடிவேலு, பாக்யராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பவதாரிணியின் மறைவிற்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பவதாரணியின் உடலுக்கு குடும்பத்தினர்களும் உறவினர்களும் இறுதிச்சடங்குகளை செய்து வருகின்றனர்.தாய் அருகில் நல்லடக்கம் செய்யப்படும் பவதாரிணியின் உடல்!

மேலும் இவரின் மறைவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்களின் இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து தற்போது பவதாரிணியின் உடல் இளையராஜாவின் தாயார் சின்னதாய் மற்றும் மனைவி ஜீவா ஆகியோரின் சமாதிக்கு அருகில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

MUST READ