Homeசெய்திகள்சினிமாஇந்தியன் 2 படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்... இணையத்தில் வைரல்...

இந்தியன் 2 படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…

-

கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்திலிருந்து காலண்டர் எனத் தொடங்கும் புதிய பாடல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் இந்தியன் இரண்டாம் பாகம். பிரம்மாண்ட இயக்கத்திற்கு பெயர் போன இயக்குநர் ஷங்கர் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தில் கமலுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக், மனோபாலா, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மற்றும் லைகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன. நாளுக்கு நாள் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றபடி ஒவ்வொரு நாளும் படக்குழு ஒவ்வொரு விதமான அப்டேட்டை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியன் இரண்டாம் பாகத்திலிருந்து காலண்டர் எனத் தொடங்கும் புதிய பாடல் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

MUST READ