ரஜினி, நெல்சன் திலிப் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த படம் பெரும்பாலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இரண்டு வருடங்கள் கழித்து ரஜினியின் படத்தைக் காண ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தை அளித்துள்ளது எனலாம். அந்த வகையில் சுமார் 4000 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளும் கூட்டம் அலைமோதுகின்றது. இனிவரும் நாட்களிலும் இப்படம் வசூலை வாரிக் குவிக்கும் என்று கூறப்படுகிறது.
Thank you u so much honourable Chief minister @mkstalin sir for watching #jailer … thanks for all the appreciation and motivation sir 🙏🙏😊😊 cast and crew is really happy with ur words 😊🙏 @rajinikanth sir #kalanithimaran sir #kaviyamaran @anirudhofficial @sunpictures pic.twitter.com/3L4LUY5XMd
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) August 11, 2023
இந்நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் ஜெயிலர் திரைப்படத்தினை கண்டு ரசித்துள்ளார். பின் நெல்சனையும் படக்குழுவுனையும் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஜெயிலர் படம் பார்த்து அதை பாராட்டியதற்கும் ஊக்குவித்ததற்கும் மிகவும் நன்றி. உங்களுடைய வார்த்தைகளால் எங்களின் ஒட்டுமொத்த படக்குழுவினர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.