ராம் சரண் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். திருநாவுக்கரசு இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் ராம் சரணுடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேசமயம் இப்படம் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. மேலும் இன்று (ஜனவரி 2) இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க முதலில் நடிகர் சங்கர் தேர்வு செய்தது விஜய் தான் என்று சொல்லப்படுகிறது. அதாவது கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தின் கதையை சங்கரிடம் தந்ததும் சங்கர் முதலில் விஜயை சந்தித்தாராம். விஜய் இந்த கேம் சேஞ்சர் படத்தின் கதையை கேட்டு மிரண்டு விட்டதாகவும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. ஆனால் இயக்குனர் சங்கர், விஜயிடம் இந்த படத்தில் நடிக்க ஒன்றரை வருடம் கால்ஷீட் தர வேண்டும் என விஜயிடம் சொன்னதால் விஜய் இந்த படத்தில் நடிக்கவில்லையாம். அதன் பிறகு தான் இயக்குனர் சங்கர், ராம் சரணை இந்த படத்தில் நடிக்க வைத்ததாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.