KGF-2 படத்தின் ஒராண்டு நிறைவை ஒட்டி KGF-3 படத்துக்கான ஹிண்ட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு!
இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பாக KGF படத்தின் 2 பாகங்களும் வெளியாகி வெற்றிபெற்றது. நடிகர் யாஷின் மிரட்டலான நடிப்பில் உருவான இத்திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் அடித்தன. இந்த திரைப்படங்களை தயாரித்து HOMBALE FILMS திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக கோலோச்சி வருகிறது.
ஹோம்பேல் பிலிம்ஸ் தனது ஓராண்டு நிறைவையொட்டி பிரசாந்த் நீலின் கேஜிஎஃப்-2 திரைப்படத்திற்கான புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் KGF-2 படத்துக்கான கொண்டாட்டங்கள் என அடங்கி இருந்த நிலையில் வீடியோவின் இறுதியில் KGF-3 படத்துக்கான குறியீடை HOMBALE FILMS தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது. அதன்படி KGF-3 படத்துக்கான பணிகள் தொடங்கி விட்டதாக கருத்தில் கொண்டு ரசிகர்கள் உற்சாகத்தில் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த HOMBALE FILMS தயாரிப்பு நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் தரமான படங்களை தயாரிக்க 3,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.