பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருந்த திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க பாபி தியோல் வில்லனாக நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, திஷா பதானி, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பல மொழிகளில் திரையிடப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் சிறுத்தை சிவா, கங்குவா திரைக்கதையில் சொதப்பிவிட்டார் எனவும் தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசையில் காலை வாரிவிட்டார் எனவும் கமெண்ட் செய்து வந்தனர். அதேசமயம் படம் வெளியாவதற்கு முன்பு படக்குழுவினர் பயங்கரமாக பில்டப் கொடுத்தனர். படம் 2000 கோடி வரை வசூல் செய்துவிடும் என்றும் அனைவரும் வாயை பிளந்து பார்க்கப் போகிறார்கள் எனவும் கூறி வந்தனர். ஆனால் படம் வெளியான பின்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் நெட்டிசன்கள் பலரும் கங்குவார் திரைப்படத்தை ட்ரோல் செய்து வந்தனர். இருப்பினும் திரைப் பிரபலங்கள் பலரும் கங்குவா படத்திற்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் கங்குவா படத்தின் சரிவிற்கு சிறுத்தை சிவா தான் காரணம் என்பது போல் சொல்லப்படுகிறது. அதாவது இயக்குனர் சிறுத்தை சிவா, சூர்யாவிற்கும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் கங்குவா படத்தை போட்டுக் காட்டவில்லை. பிரம்மாண்ட காட்சிகள் இடம்பெற்ற சில காட்சிகளை மட்டும் தான் காட்டினாராம். எனவே அந்த காட்சிகளை பார்த்த படக்குழுவினர், இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கிறது என்று சிறுத்தை சிவாவை நம்பி ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பயங்கர பில்டப் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதே சமயம் படத்தில் சில திருத்தங்கள் செய்து இன்று மாலை முதல் படத்தை திரையிட படக்குழு முழு முயற்சிகள் எடுத்து வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயாரிப்பாளருக்கே படத்தை போட்டுக் காட்டாத இயக்குனர்…. ‘கங்குவா’ பட சரிவிற்கு சிறுத்தை சிவா தான் காரணமா?
-