சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோலிவுட்டில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு இசை அமைப்பாளராக அறிமுகமானர் சந்தோஷ் நாராயணன். இதைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பல படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினார்.
விஜய் சேதுபதியின் சூது கவ்வும், விமல் நடித்த பில்லா ரங்கா, ஜிகர்தண்டா, மெட்ராஸ், 36 வயதினிலே, காதலும் கடந்து போகும், பைரவா, மேயாத மான், காலா, ஜிப்சி, பென்குயின், பாரிஸ் ஜெயராஜ், கர்ணன் என பல படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார். தமிழில் ரசிகர்களை கவர்ந்த சந்தோஷ் நாராயணன் அடுத்து தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து பல மொழிப் படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார். தற்போது வரை 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார்.
தற்போது பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் கல்கி படத்திற்கு இசை அமைத்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நீயே ஒளி என்ற தலைப்பில் கோலாகலமாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர் சித்தார்த்தும் பங்கேற்று பாடல்கள்பாடினார். மேலும், இசைக்கச்சேரியில் கல்கி படத்திற்காக சந்தோஷ் தயாரித்த இசையையும் வௌியிட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.