Homeசெய்திகள்சினிமாஅஜித்தின் வேதாளம் படத்தை தொடர்ந்து 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

அஜித்தின் வேதாளம் படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

-

குட் பேட் அக்லி படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.அஜித்தின் வேதாளம் படத்தை தொடர்ந்து 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாக இருக்கின்றன. அதைத்தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தினை மார்க் ஆண்டனி திரைப்படத்தினை இயக்கி வெற்றி கண்ட ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஐதராபாத் பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித் தவிர சுனில், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதற்கு நடிகை திரிஷா கமிட் ஆகியுள்ளார் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.அஜித்தின் வேதாளம் படத்தை தொடர்ந்து 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபல நடிகர்! இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் பிரபல நடிகர் ராகுல் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம். இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக ராகுல் தேவ்- ன் கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ