Homeசெய்திகள்சினிமா'கேம் சேஞ்சர்' படம் பார்த்து முதல் விமர்சனம் கொடுத்த பிரபல இயக்குனரின் மகன்!

‘கேம் சேஞ்சர்’ படம் பார்த்து முதல் விமர்சனம் கொடுத்த பிரபல இயக்குனரின் மகன்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர்.கேம் சேஞ்சர் படம் பார்த்து முதல் விமர்சனம் கொடுத்த பிரபல இயக்குனரின் மகன்! இந்த படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்க எஸ் ஜே சூர்யா இதில் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இதில் ராம் சரண் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். கேம் சேஞ்சர் படம் பார்த்து முதல் விமர்சனம் கொடுத்த பிரபல இயக்குனரின் மகன்!ஆக்சன் கலந்த அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராம் சரண் கலெக்டராக நடித்திருக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தது இந்த படம் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனர் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா இந்தப் படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய முதல் விமர்சனத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சங்கரின் சமூக கருத்துள்ள படங்களை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது? தற்போது மீண்டும் அதே சங்கர் திரும்ப வந்துவிட்டார். மீண்டும் சங்கர், ஒவ்வொரு ஃபிரேமிலும் முத்திரை பதித்துள்ளார். மேலும் என் அன்பு சகோதரர் ராம்சரண் வெவ்வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விசில் சத்தம் பறக்கும் நிறைய காட்சிகள் படத்தில் இருக்கின்றன. இதை நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். டியர் சங்கராந்தி விரைவில் வா. இந்த காம்போவில் உருவான படத்தை பார்க்க காத்திருக்க முடியாது. தயாரிப்பாளர் தில்ராஜு மற்றும் கேம் சேஞ்சர் படத்தின் ஒட்டுமொத்த பட குழுவில் இருக்கும் இந்த படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ