Homeசெய்திகள்சினிமாதனது மகனை ஹீரோவாக்கும் பிரபல தயாரிப்பாளர்..... கண்டிஷன் போட்டதால் ஏற்பட்ட சிக்கல்!

தனது மகனை ஹீரோவாக்கும் பிரபல தயாரிப்பாளர்….. கண்டிஷன் போட்டதால் ஏற்பட்ட சிக்கல்!

-

- Advertisement -

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர் லலித் குமார் பல பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரித்து வருகிறார். தனது மகனை ஹீரோவாக்கும் பிரபல தயாரிப்பாளர்..... கண்டிஷன் போட்டதால் ஏற்பட்ட சிக்கல்!அந்த வகையில் விக்ரமின் மகான், கோப்ரா போன்ற படங்களையும் விஜயின் மாஸ்டர், லியோ போன்ற படங்களையும் இவர்தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்ஐகே திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் லலித்குமார். இவர் குறுகிய காலங்களிலேயே மிகப்பெரிய தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். இந்நிலையில்தான் லலித் குமார் திரைத்துறையில் தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளாராம். இது தொடர்பாக முதலில் கௌதம் வாசுதேவ் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அதே சமயம் கௌதம் மேனனுக்கு 5 கோடி வரை சம்பளம் பேசப்பட்ட நிலையில் அந்த 5 கோடியை படத்தை முடித்த பின்பு தருவதாக லலித் குமார் கண்டிஷன் ஒன்றை போட்டாராம். இதற்கு கௌதம் மேனன் ஒப்புக்கொள்ளவில்லையாம்.தனது மகனை ஹீரோவாக்கும் பிரபல தயாரிப்பாளர்..... கண்டிஷன் போட்டதால் ஏற்பட்ட சிக்கல்! எனவே அவரைத் தொடர்ந்து லலித் குமார், லிங்குசாமியிடம் செல்ல அவர் மகாபாரத கதையை இயக்குவது தொடர்பான பணிகளில் பிஸியாக இருப்பதால் அவரும் மறுத்துவிட்டாராம். அடுத்தது லலித்குமார் புதுமுக இயக்குனர் ஒருவரிடம் கதை கேட்டுள்ளதாகவும் படத்திற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் தலித் குமாரின் மகன் நடிக்கும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் லலித் குமாரின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ