பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்லாவின் தாயார் சரண் சிங் மீண்டும் கர்ப்பமாக இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மூஸ்வாலா தனது பாடல்களின் மூலம் துப்பாக்கி கலாச்சாரம், வன்முறை போன்றவற்றை ஊக்குவிப்பார். அந்த வகையில் இவருடைய பாடல்கள் பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்கியது. அதே சமயம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி கனடா பின்னணியின் கேங்ஸ்டர்ர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இவருடைய தாயார் சரண் சிங் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சித்து மூஸ்வாலாவின் தாயார் சரண்சிங் 58 வயது நிரம்பியவர். இவர் செயற்கை கருத்தரிப்பு முறையில் மீண்டும் கர்ப்பமானார். அடுத்த மாதம் இவருடைய பிரசவம் நிகழ இருக்கிறது. ஏற்கனவே சித்து மூஸ்லாவின் படுகொலைக்கு பழிவாங்க வேண்டும் என ரசிகர்கள் துடித்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பாடகர் சித்து மூஸ்லாவின் தாயார் கர்ப்பமாக உள்ள தகவல் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.