நாம் சிறு வயது முதலே தி லயன் கிங் கதையை கேட்டிருப்போம், படித்திருப்போம், கார்ட்டூன் ஆகவும், 3D அனிமேஷன் திரைப்படமாகவும் பார்த்திருப்போம். அனைத்து வடிவத்திலும் நம்மை குழந்தை பருவத்திற்கே கூட்டிச் செல்லும் அளவிற்கு நேர்த்தியாக அமைந்த படம் தான் தி லயன் கிங். சூழ்ச்சியான உடன்பிறப்பால் நயவஞ்சகமாக கொல்லப்படும் காட்டின் அரசனான சிங்கம், அடிமையாக்கப்படும் ராணி சிங்கம், நாட்டை விட்டு சிறு வயதில் துரத்தப்படும் இளவரசன் சிங்கம் என அரச குடும்பம் பரிதவித்து இறுதியில் இளவரசன் எதிரிகளை வீழ்த்தி தன் தந்தையின் அரியாசனத்தை கைப்பற்றி சக விலங்குகளை காப்பது தான் படத்தின் கதை. ஆம், கிட்டத்தட்ட பாகுபலி படமும் இதே பார்மட் தான். தி லயன் கிங் படத்தில் அப்பாகவாக வரும் சிங்கமான முபாஸாவின் கதை தற்போது ‘முபாஸா தி லயன் கிங்‘ எனும் பெயரில் உருவாகியுள்ள படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதிஅன்று உலகம் எங்கும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த முபாஸா கதாபாத்திரத்திற்கு இந்தியில் ஷாருக்கான், தெலுங்கில் மகேஷ்பாபு டப்பிங் செய்துள்ளனர். தற்போது தமிழில் இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் அர்ஜுன் தாஸ் டப்பிங் செய்ய உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் வரும் டாக்கா கதாபாத்திரத்திற்கு அசோக் செல்வனும், கதாபாத்திரத்திற்கு நாசரும், ரஃபிக் கதாபாத்திரத்திற்கு VTV கணேஷ், முதல் பாகத்தைப் போலவே டிமோன் கதாபாத்திரத்திற்கு சிங்கம்புலியும், பூம்பா கதாபாத்திரத்திற்கு ரோபோ சங்கரும் டப்பிங் பேசி உள்ளனர். பேரி ஜெர்கின்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். வால்ட் டிசைனிங் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.