Homeசெய்திகள்சினிமாதமிழ் பட வாய்ப்பை இழந்த பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்

தமிழ் பட வாய்ப்பை இழந்த பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்

-

 நடிகை ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளரும் நடிகருமான போன கபூருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர், இளைய மகள் குஷி கபூர். ஜான்வி கபூர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தி திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் நயன்தாரா நடித்த கோலாமவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். அதேபோல, மலையாள படத்தின் இந்தி ரீமேக்கிலும் அவர் நடித்து புகழ் பெற்றார்.
இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், கடந்த ஆண்டு தெலுங்கிலும் தடம் பதித்தார். ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் தேவரா திரைப்படத்தில் அவர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம், அவர் தெலுங்கிலும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ராம்சரண் நடிக்கும் 16-வது திரைப்படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார்.
தெலுங்கு மட்டுமன்றி தமிழ் மொழியிலும் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக கதை கேட்டு வந்த அவர், சூர்யாவின் கர்ணா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், இத்திரைப்படம் கைவிடப்பட்டதால், ஜான்வி கபூர் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாக இருந்த வாய்ப்பு கைநழுவியது. இதனால், நடிகை ஜான்வி கபூர் தமிழுக்கு வருவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

MUST READ