Homeசெய்திகள்சினிமாநாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

-

நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்.

எல் ஜி எம்

தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் எல் ஜி எம் (Let’s Get Married) திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நதியா, இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இந்தப் படத்தை இயக்கி இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.LOVE -லவ்

பரத் மற்றும் வாணி போஜன் கூட்டணியில் லவ் திரைப்படம் உருவாகியுள்ளது. இது மலையாளத் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர் பி பாலா தயாரித்து இயக்கியுள்ளார். ரோனி ரபேல் இசையமைக்க பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். காதல் கலந்த க்ரைம் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.டிடி ரிட்டன்ஸ்

நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிடி ரிட்டன்ஸ். இப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியான தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ளது. இதில் சந்தானத்துடன் இணைந்து சுரபி, மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, சங்கர், மாறன், விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர் கே என்டேர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். காமெடி- ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் நாளை வெளியாக இருக்கிறது. பீட்சா 3: தி மம்மி

அஸ்வின் கக்குமனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீட்சா 3: தி மம்மி. இது கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ளது. இதில் அஸ்வின் உடன் இணைந்து காளி வெங்கட், கௌரவ் நாராயணன், குரேஷி, பவித்ரா, அனுபமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திருக்குமரன் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவிலும் அருண் ராஜ் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. திகில் நிறைந்த இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இப்படம் கடந்த மே மாதம் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.ப்ரோ

கடந்த 2021 ஆம் ஆண்டு சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா கூட்டணியில் வெளியான வினோதய சித்தம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் ப்ரோ. இந்தப் படத்தை சமுத்திரக்கனி இயக்க பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. த்ரிவிக்ரம் திரைக்கதை,வசனம் எழுத தமன் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ஃபர்ஸ்ட் சிங்கள் மற்றும் ட்ரெய்லர் என அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

MUST READ