Homeசெய்திகள்சினிமாநாளை வெளியாகும் 'தி கோட்' படத்தின் மூன்றாவது பாடல்.... புதிய போஸ்டர் வெளியீடு!

நாளை வெளியாகும் ‘தி கோட்’ படத்தின் மூன்றாவது பாடல்…. புதிய போஸ்டர் வெளியீடு!

-

விஜய் நடிப்பில் தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். நாளை வெளியாகும் 'தி கோட்' படத்தின் மூன்றாவது பாடல்.... புதிய போஸ்டர் வெளியீடு!அதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்துள்ளார்கள். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. நாளை வெளியாகும் 'தி கோட்' படத்தின் மூன்றாவது பாடல்.... புதிய போஸ்டர் வெளியீடு!ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் அதைத்தொடர்ந்து முன்னோட்ட வீடியோவும் வெளியானது. இதற்கிடையில் இந்த படமானது செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. மேலும் விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் மூன்றாவது பாடல் (நாளை) ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று (ஆகஸ்ட் 2) வெளியான நிலையில் தற்போது இந்த பாடல் தொடர்பான புதிய போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரின் மூலம் இந்த பாடலானது விஜய் மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகிய இருவருக்குமான பாடல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த பாடலின் இப்ரோமோ வீடியோ இன்று மாலை 7 மணி அளவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

MUST READ