Homeசெய்திகள்சினிமாவடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க சிங்கமுத்துவிற்கு தடை!

வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க சிங்கமுத்துவிற்கு தடை!

-

வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க நடிகர் சிங்கமுத்துவுக்கு தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க சிங்கமுத்துவிற்கு தடை!

தமிழ் சினிமாவில் வடிவேலுவும் சிங்கமுத்துவும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்கள். அந்த வகையில் இருவரும் இணைந்து திமிரு, பம்பரக் கண்ணாலே போன்ற பல படங்களில் நடித்திருக்கும் நிலையில் இவர்களின் காம்போ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தான் நடிகர் சிங்கமுத்து பேட்டி ஒன்றில் வடிவேலுவின் வெற்றிக்கு தான் தான் காரணம் எனவும் அவர் பணமும் புகழும் சம்பாதித்தது தன்னால்தான் எனவும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் வடிவேலு தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததற்காக சிங்கமுத்து மீது வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது தன்னை பற்றி அவதூறு பரப்பியதற்காக ரூ. 5 கோடி மாண நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் வடிவேலு. வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க சிங்கமுத்துவிற்கு தடை!இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்த நிலையில் சிங்கமுத்து, அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கருத்து தெரிவிக்கவில்லை என பதிலளித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நடிகர் வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க தடை விதித்து, வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாத மனு தாக்கல் செய்ய சிங்கமுத்துவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ