மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி….
கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி‘ எனும் திரைப்படம் கடந்த மே 5ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் அடா ஷர்மா, யோஹிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சன் சைன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. வீரேஷ் ஶ்ரீ வல்ஸா இதற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வௌியான நாள் முதலே பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல நாடுகளில் இப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது.
இந்த படத்தில், 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.இது போன்ற கதையினால் இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்தே இப்படம் சர்ச்சைக்குள்ளானது. இதனால் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட நாடுகளில் இந்தப் படத்திற்கு பல்வேறு விதமான எதிர்ப்புகள் கிளம்பியது.அதன்பின் பல போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி ரூ.240 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை எந்த ஒரு ஓடிடி நிறுவனமும் வெளியிட முன்வராத நிலையில், கடந்த மார்ச் மாதம் தான் ஜீ5 நிறுவனம் படத்தை வௌியிட்டது.
இந்நிலையில், இத்திரைப்படம் மேலும், ஒரு புதிய பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா ஸ்டோரி போன்றே, மணிப்பூர் கலவரத்தை மையப்படுத்திய திரைப்படத்தை கேரளாவில் உள்ள தேவாலயங்களில் வௌியிட உள்ளதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். கொச்சியில் உள்ள ஜான்ஜோசுபுரம் தேவாலயத்தில் இத்திரைப்படம் திரையிடப்படுகிறது. கற்பனையான தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடும்போதும், ஏன் உண்மை மணிப்பூர் கலவர படத்தை திரையிடக்கூடாது என கேள்வி எழுப்புவதாக தெரிகிறது