கங்குவா அப்டேட்… வில்லன் பாபி தியோலின் போஸ்டர் …
- Advertisement -

கோலிவுட்டின் முன்னணி நடிகர் சூர்யா. எவர் கிரீன் ஹீரோ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுவர் சூர்யா. அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இப்படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்தது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரோலக்ஸ் என்ற வேடத்தில் கமலுக்கு வில்லனாக நடித்திருப்பார். இக்கதாபாத்திரம் கோலிவுட்டில் பெரிதும் பேசப்பட்ட ஒன்றாகும்.

இதைத்தொடர்ந்து சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா படத்தை இயக்குகிறார். சூர்யாவின் திரை வாழ்வில் மாபெரும் பட்ஜெட்டில் வரலாற்று கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார். பிரபல இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் நடிகர் சூர்யாவின் காட்சிகள் நிறைவு பெற்றதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அண்மையில் கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது கங்குவா படத்தில் பாபி தியோலின் புதிய போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.