Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜூனின் புஷ்பா 2... புதிய ரிலீஸ் அப்டேட் இதோ...

அல்லு அர்ஜூனின் புஷ்பா 2… புதிய ரிலீஸ் அப்டேட் இதோ…

-

- Advertisement -
kadalkanni
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், நட்சத்திர தயாரிப்பாளரின் மகனாகவும் இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜூன். தெலுங்கில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அலவைக்குந்தபுரமுலோ திரைப்படத்தின் வெற்றி அல்லு அர்ஜூனின் மார்க்கெட்டை டோலிவுட்டில் உச்சத்திற்கு கொண்டு சென்றது.  இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, அல்லு அர்ஜூன் நடிக்கும் படங்களுக்கு ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும் காத்திருந்தன. தொடர்ந்து, கடந்த 2021-ம் ஆண்டு புஷ்பா தி ரைஸ் படம் வெளியானது.
இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருப்பார். சுனில், ஃபகத் பாசில், பிரசாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்தித்தில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இத்திரைப்படத்தை சுகுமார் இயக்கினார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு சுமார் நூறு கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகவும் அமைந்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்களும், நடிகைகளும் இரண்டாம் பாகத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில், சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்தது. இதனால், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. முதலில் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்ட புஷ்பா இரண்டாம் பாகம் தற்போது டிசம்பர் மாதத்திற்கு தள்ளிவைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா முதல் பாகமும் டிசம்பரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ